ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 200-யைத் தொட்டது!
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கிட்ட தட்ட 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஹாராஸ்டிரா மற்றும் டெல்லி (54), தெலுங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (14), உத்தர பிரதேஷ் (2), ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (1) என்று மொத்தம் இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
“ சிறுக சிறுக பெருகி வரும் ஒமிக்ரான் தொற்று எப்போது இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இருந்தாலும் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் வீரியம் குறைவாக இருப்பது நிம்மதி பெருமூச்சுக்கு வழி வகுக்கிறது “