ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் 213 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!
இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் (57) , மஹாராஸ்டிராவில் (54) , தெலுங்கானா (24), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15), குஜராத் (14) என்று ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக இந்தியாவில் அதிகரித்து இருந்தாலும், இன்னொரு பக்கம் அதிகரிக்கும் ஒமிக்ரானால் தேசம் என்ன செய்வதென்று தெரியாமக் திகைத்து நிற்கிறது. மறுபடியும் ஊரடங்கு என்றால் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும். ஊரடங்கை அமல்படுத்த தவறினால் ஒமிக்ரான் வீரியம் எடுக்கும். இரண்டுக்கும் நடுவில் மக்களும் அரசும் மன்றாடுகிறது “