ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 358 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 24 12 2021

Omicron Updates In India 24 12 2021

நேற்று மட்டும் 122 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 358 ஆக அதிகரித்து இருக்கிறது.

அதிகபட்சமாக மஹாராஸ்டிரா (88), டெல்லி (67), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (30) என்று 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து மொத்தம் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 122 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“ வெகு விரைவில் பரவலை மேற்கொள்ளும் ஒமிக்ரான் தொற்றின் காரணமாக மும்பை உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது இன்னமும் எந்த அளவுக்கு வீரியம் எடுக்கும் என்பதும் யாரும் அறியாத ஒன்றாய் இருக்கிறது “

About Author