ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
இந்தியாவில் இதுவரை 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 108, டெல்லி 79, குஜராத் 43, தெலுங்கானா 41, கேரளா 38, தமிழ்நாடு 34, கர்நாடகா 31 என்று ஒட்டு மொத்தமாக தேசத்தில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிராவில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
“ இந்த ஒமிக்ரான் மட்டும் இந்தியாவில் இன்னும் தீவிரம் எடுத்தால் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேலான தொற்றுகள் பதிவாக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் “