ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!
Omicron Updates In India 27 12 2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 156 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லி (142), மஹாராஸ்டிரா (141), கேரளா (57), குஜராத் (49), ராஜஸ்தான் (43) என ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நேற்று மட்டும் 156 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் 578 ஆக உயர்ந்து இருக்கிறது.
“ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றால் மீண்டும் அவசர நிலை எந்த சூழலிலும் நேரிடலாம் என்று முன்னெச்சரிக்கையோடு கோவிட் வார் இயக்கங்களை மீண்டும் துவங்க இருக்கிறது மத்திய அரசு “