ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் தற்போது வரை 781 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு!
Omicron Updates In India 29 12 2021
இந்தியாவில் தற்போது வரை 781 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
அதிகபட்சமாக டெல்லியில் 238 தொற்றும், மஹாராஸ்டிராவில் 167 தொற்றும், குஜராத்தில் 73 தொற்றும், கேரளாவில் 65 தொற்றும், தெலுங்கானாவில் 62 தொற்றும் கண்டறியப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக தேசத்தில் ஒமிக்ரான் தொற்றின் நிலவரம் ஆனது 781 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
“ தினசரி ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்காக உயர்ந்து வருவதால் மக்கள் மறுபடியும் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் “