ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் ஆயிரத்தை நெருங்குகிறது புதிய ஒமிக்ரான் தொற்று’
இந்தியாவில் தற்போது வரை 961 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
அதிகபட்சமாக டெல்லியில் 263 தொற்றுகளும், மஹாராஸ்டிராவில் 252 தொற்றுகளும், குஜராத்தில் 97 தொற்றுகளும், ராஜஸ்தானில் 69 தொற்றுகளும், கேரளாவில் 65 தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 961 தொற்றுகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ டெல்டா வகைதனை விட ஒமிக்ரான் வீரியம் குறைவாக காணப்பட்டாலும், பரவும் தன்மையும், பரவும் வேகமும் அதிகமாக இருப்பதாக உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன “