ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 1,270 பேருக்கு புதியதாக ஒமிக்ரான் தொற்று!
இந்தியாவில் தற்போது வரை 1,270 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 450 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 320 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 109 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும் மற்றும் ராஜஸ்தானில் 69 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 1,270 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
“ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றால் பெருமளவில் பாதிப்புகள் இல்லையெனினும் பரவும் வீரியம் மட்டும் அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “