பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 10 வரை குறைய வாய்ப்பு!
பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் 10 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை வெகுவாக குறைத்து இருந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு உபரி வருவாய் மட்டும் 75,000 கோடி வரை கிடைத்து இருக்கிறதாம். இதனால் வாடிக்கையாளர் மீதான சுமையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 5-10 ரூபாய் வரை குறைக்க இருக்கிறதாம்.
“ கிட்டதட்ட 600 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து இருக்கும் இந்த முடிவிற்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு அளித்து இருக்கின்றனர் “