மசூதிகளை தோண்டுவதை போல கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்
Prakash Raj Controversial Speech About Masjid And Temple Idamporul
மசூதிகளை தோண்டுவதை போல, கோவில்களையும் தோண்டிடுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது என பிரகாஷ் ராஜ் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான மசூதிகள் கோவில்களை இடித்து கட்டப்பட்டவை என ஒரு புறம், ஒரு சாரார் கூறிக் கொண்டு வருகின்றனர். இது குறித்து பதில் அளித்த பிரகாஷ் ராஜ், மசூதிகளை தோண்டினால் கோவில் வருகிறதென்றால், கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை வர வாய்ப்பு இருக்கிறது என கூறி இருக்கிறார்.
“ 500 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அயோத்தி விவகாரம் இன்னும் இந்தியா என்ற மதச்சார்பற்ற நாட்டிற்குள் சர்ச்சையை கிளப்புகிறது என்றால் இங்கு மத ரீதியான அரசியல் இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது அர்த்தப்படுகிறது “