குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை எனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் – PN BANK
குறைந்தபட்ச இருப்புத்தொகை அக்கவுண்ட்டில் இல்லையெனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் என்று பஞ்சாப் நேசனல் வங்கி அறிவித்து இருக்கிறது.
மெட்ரோ நகரங்களில் காலாண்டு இருப்புத் தொகையை 5000-லிருந்து 10,000-மாக மாற்றி இருப்பது மட்டுமில்லாமல், அக்கவுண்ட்டில் மினிமம் பேல்ன்ஸ் தொகை இல்லையெனில் காலாண்டுக்கு ரூபாய் 600 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கு முன்னர் பிடித்தம் ரூபாய் 300-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ கையில் இருக்கும் காசை வங்கியில் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி வங்கியில் சேமிக்கும் எளிய மக்களுக்கு இனி வங்கியும் எட்டாக் கனியாகி விடும் போல “