இனி எஸ்பிஐ மின்னனு பரிமாற்றத்தின் மூலம் கட்டணத்தொகை இல்லாமல் 5 லட்சம் வரை அனுப்பலாம்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடி பரிமாற்றம் எனப்படும் IMPS வழியாக இனி 5 லட்சம் வரை எந்த வித பிடிப்பு கட்டணமும் இல்லாமல் அனுப்பலாம் என அறிவித்து இருக்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணைய வழி மூலம் உடனடி மின்னனு பரிமாற்றம் இதற்கு முன்னர் 2 லட்சம் வரையில் தான் அனுப்ப இயலும். ஆனால் தற்போது வங்கி அதிகபட்ச பரிமாற்ற தொகையை 5 லட்சமாக உயர்த்தி அதற்கு பிடிப்பு கட்டணத்தையும் தளர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ டெபாசிட் மெசின்களில் 100 ரூபாய் போட்டாலும் ரூ 25 பிடிப்பு கட்டணம் வசூலிக்கிறது எஸ்பிஐ, அதையும் தளர்த்தினால் பெரும்பாலான பொதுமக்கள் பயன் பெறுவர் “