தீவிரமெடுக்கும் கொரோனா | ‘தினசரி பாதிப்பு ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் ஆகுமென எச்சரிக்கை’
Soon Daily Corona Count Will Increase 10 Laksh
தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி இறுதிக்குள் பத்து லட்சத்தை கடக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
தற்போது இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை நெருங்கி இருக்கும் கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் பத்து லட்சமாக உயர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஒன்றிய அரசும் மீண்டும் மாநில அரசுகளை கொரோனா வார்டுகளை தயார் செய்ய சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது.
“ தினசரி 10 லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு சென்றால் அதை மாநில அரசுகள் எப்படி சமாளிக்கும் என்பது தான் இங்கு புரியாத புதிராக இருக்கிறது “