எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது – உச்சநீதிமன்றம்
எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
ஹரியானாவில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 6 பேர் பலியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் மாநில அரசையும், ஹரியான மாநில காவல்துறையையும் வன்மையாக கண்டித்து இருக்கிறது. எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது. யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்து இருக்கிறது.
பெரும்பான்மையினரின் அமைதிக்காக, சிறுபான்மையினர் மீது என்ன குற்றம் இழைக்கப்பட்டாலும் அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே. நடவடிக்கைகளும் கண்டிப்பும் மட்டுமே அவர்கள் அடுத்து இப்படி ஒரு செயலை செய்யாமல் இருப்பதற்கு வழி வகுக்கும். என உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் விடுத்து இருக்கிறது.
“ ஒரு நீதிமன்றம் இறங்கி மட்டுமே நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அநீதி செயலுக்கும் கண்டனம் தெரிவித்து அரசை வழி நடத்த வேண்டுமானால், சாமானிய மனிதனின் குரலுக்காக உருவாக்கப்பட்ட அரசும், காவல்துறைகளும் எதற்கு என்று இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் “