கொரோனாவை அடுத்து மிரட்டும் பன்றி மற்றும் பறவை காய்ச்சல்!
Swine Flu Spreading Fast In Kerala Idamporul
இன்னும் கொரோனாவே ஓயாத நிலையில் அடுத்ததாக பன்றி மற்றும் பறவை காய்ச்சல் தேசத்தை தொற்றிக் கொண்டு இருக்கிறது.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு இருந்த 3600-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கேரளாவை அடுத்து அருகில் இருக்கும் தமிழகத்திலும் இது பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையில் பாதுகாப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
“ மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்றாலும் உருமாறிய வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது “