டாடா ஐபிஎல் 2022-யின் 31-ஆவது போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பெங்களுரு அணி.
முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 96(64) ரன்கள் விளாசினார். அதற்கு பின் ஆடிய லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி ஹேசல்வுட்டின் வேகத்தால் 4-25 தாக்கு பிடிக்க முடியாமல் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.
“ வர வர பெங்களுரு அணி மெருகு ஏறி வருகிறது. இந்த வருடம் ‘ஈ சாலா கம் நமதே’ என்பதை மெய் ஆக்கி விடுவார்கள் போல “