’நான்காவது அலைக்கு வாய்ப்பில்லை, ஆனாலும் உஷாராக இருங்கள்’ – மருத்துவ வல்லுநர்கள்
Health Experts About Corona Fourth Wave
கொரோனா எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் நான்காவது அலைக்கு வாய்ப்பில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றின் விகிதம் ச்ற்றே உயர்ந்து வரும் இந்த நிலையில், தேசத்தில் நான்காவது அலைக்கு வாய்ப்பு இல்லை என்று ஒரு சில மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் மக்கள் தொற்று குறித்த விழிப்புணர்வுடன் உஷாராகவே இருக்க வேண்டும் என்றும் அறிவித்து இருக்கின்றனர்.
“ ஒரு பக்கம் உயர்ந்து வரும் கொரோனா தொற்று, ஒரு பக்கம் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை மீண்டும் மீண்டும் தாக்கும் கொரோனா இதற்கிடையில் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் மக்கள் “