இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை!
இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை என ஒரு மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்கு என்ன விவரம் என்று இங்கு பார்க்கலாம்.
லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருப்பவர்கள் அதை பொதுவெளியில் அறிவிக்காமல் மறைமுகமாக தொடர்ந்து, அது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாத சிறையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரகண்ட் சட்டசபையில் லிவ் இன் ரிலேசன்சிப் குறித்து புதிய பொது சிவில் சட்ட விதிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
“ நிறைய காதலர்கள் இந்த லிவ் இன் ரிலேசன்சிப் உறவுமுறையை தவறாக பயன்படுத்திக் கொள்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக உத்தரகண்ட் அரசு கூறி வருகிறது “