சுங்கச்சாவடி கட்டண உயர்வு பொது ஜன மக்களை எப்படி பாதிக்கிறது?
சுங்கச்சாவடி கட்டணம் பழைய கட்டணத்தை விட 5 சதவிகிதம் வரை உயர்ந்து இருக்கும் நிலையில், இந்த கட்டண உயர்வு பொது ஜன மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்து இருந்து சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் 5 சதவிகிதம் வரை உயர்ந்து இருக்கும் நிலையில், ஏற்கனவே விதிக்கப்பட்டு இருக்கும் கட்டணத்தை விட தற்போது, ஒரு முறை சென்று திரும்ப வருவதற்கான கட்டணம் ரூ 5 முதல் 20 வரை உயர்ந்து இருக்கிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ 100 முதல் 400 வரை உயர்ந்து இருக்கிறது.
’நம்மகிட்ட என்ன காரா இருக்கு, நமக்கு இதுல என்ன பாதிப்பு இருக்க போது’ என்று கேட்கும் வெகு ஜன மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான், சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது, 5 சதவிகிதமே இருக்கின்ற ஆதிக்க பணக்காரர்களை விட, மீதி 95 சதவிகிதம் இருக்கும் மிடில் கிளாஸ்களையும் அதற்கும் கீழ் இருக்கின்ற ஏழை எளிய மக்களையும் தான் அதிகம் பாதிக்கிறது.
ஒரு சாதாரண மக்களுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய பொருள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு வருகிறது எனில், அது பல தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து வர வேண்டியதாக இருக்கும். ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் விதிக்கப்படும் கட்டணம் என்பது அந்த அத்தியாவசியத்தின் விலையின் மீது விழுகிறது, கடைசியில் அந்த அத்தியாவசிய பொருள் நம்மை வந்து சேரும் போது அதன் பழைய விலையை விட பல மடங்கு உயர்ந்து இருக்கும்.
“ ஆதலால் சுங்கச்சாவடி கட்டணம் என்பது நேரடியாக நம்மை பாதிக்கவில்லையெனினும், இது மறைமுகமாக நம்மை தான் நூறு சதவிகிதம் பாதிக்கும். சாலைகளுக்கு ஏற்கனவே வரிகளை வாங்கி விடும் அரசு, அதற்கு பின்னரும் ஏன் அந்த சாலைகளை கடப்பதற்கு சுங்கச்சாவடி கட்டணம் கேட்பது ஏன் என்பது புரியாத புதிராக தான் இருக்கிறது “