தக்காளி விலை நான்கு ரூபாய்க்கு சரிவு, சோகத்தில் விவசாயிகள்!
தக்காளின் விலை கிலோ நான்கு ரூபாய்க்கு சரிந்ததால், தக்காளி விதைத்த விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர்.
கிலோ 150 ரூபாய் வரை விற்ற தக்காளியால், விவசாயிகள் பலரும் நிலத்தில் தக்காளியை விதைத்தனர். ஆனால் ஒரு மாதத்திற்குள் தற்போது தக்காளியின் விலை மளமளவென குறைந்து நான்கு ரூபாய்க்கு சரிந்ததால், விவசாயிகள் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று விதைத்த தக்காளியை எல்லாம் சாலையில் கொட்டி வருகின்றனர்.
“ ஒரு மாதத்திற்கு முன்னாள் தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயிகளையும் பார்த்தோம், தற்போது தக்காளியால் கடனாளிகளாக நிற்கிற விவசாயிகளையும் பார்க்கிறோம் “