புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது!
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பது நெஞ்சை பதற வைக்கிறது என தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமியை மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்த கொலையாளிகளுக்கு புதுச்சேரி அரசும் காவல்துறையும் அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
” பெற்ற மகளை இழந்து பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் தனது ஆறுதலையும் அளிக்க கடமைப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் பதிவிட்டு இருக்கிறார் “