டிவிட்டரில் ட்ரென்ட் ஆகும் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’!
Narendra Modi PM Of India
சமூக வலைதளங்களில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைக்க இன்று தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு வர இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை முதலே ட்விட்டரில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன.
” பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் இந்த ஹேஸ்டாக் ட்ரென்டிங் என்பது வாடிக்கையாகி வருகிறது “