133 கோடியை தொட்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!
பெரும் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியைத் தொட்டு இருக்கிறது.
கொரோனோவுக்கு எதிராக தேசத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், செர்ரம் நிறுவனத்தின் கோவீஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றோடு அந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியை அடைந்து இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 38.4 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர்.
“ ஒரு பக்கம் தடுப்பூசி உபயோகம் 133 கோடி என்று ஒன்றிய அரசு கணக்கு காட்டி வரும் அதே வேளையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரானுக்கு தற்போதைய தடுப்பூசி பயன் தருமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்து வருகிறது “