தேசத்தில் 175 கோடியை நெருங்குகிறது ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம்!
Vaccination In India Reached Near To 175 Crores
ஒட்டு மொத்தமாக தேசத்தில் 174.5 கோடி பேர் தடுப்பூசி உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
தற்போது 5 மணி நிலவரப்படி தேசத்தில் இன்று மட்டும் 34.10 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 175 கோடியை நெருங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் தடுப்பூசி செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறது நம் இந்திய அரசு.
” சிறார்களுக்கும் தடுப்பூசியை சிறப்பாக அரசு செயல்படுத்தி வருவதால் இனி கொரோனா எந்த ரூபம் எடுத்தாலும் அதை எதிர்கொள்ள இலகுவாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் “