இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை எட்டி இருக்கிறது!
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் தற்போது 100 கோடியை எட்டி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 99.85 கோடியை நேற்று நிலவரப்படி எட்டியிருந்த நிலையில் இன்று அது 100 கோடி என்ற இமாலய இலக்கை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ட்ரெயின்களில், விமானங்களில் ஸ்பீக்கர்களில் மூலம் அறிவிப்பு விடுத்தும் செங்கோட்டையில் கொடி ஏற்றியும் இந்த பெரும் நிகழ்வை கொண்டாட இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
“ வளர்ந்த நாடுகளே தடுப்பூசி செயல்பாடுகளில் திணறி வரும் நிலையில் 133 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில், தடுப்பூசி செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு 100 கோடி தடுப்பூசி உபயோகத்தை அடைந்து இருக்கிறது இந்தியா. நிச்சயம் பெருமை கொள்வோம் “