தேசத்தில் 150 கோடியை எட்டி இருக்கிறது தடுப்பூசி உபயோகம்!
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 150 கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
நேற்றைய தினத்தில் மட்டும் 81 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 150 கோடியைத் தொட்டு இருக்கிறது. தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் 91 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். சிறார்களுக்கான தடுப்பூசியை 2 கோடி பேர் எடுத்துக் கொண்டுள்ளனர்.
“ தடுப்பூசி தொற்றைத் தடுக்கவில்லையெனினும் தொற்றின் வீரியத்தை குறைப்பது உண்மை. ஆதலால் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் அதிகபட்சமாக பெரும் உயிரிழப்புகளை தடுக்கலாம் “