தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியை தொட்டு இருக்கிறது!
Vaccination In India Reached 171 Crores Plus
ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 46.44 இலட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியாக ஆகி இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
“ உலகளாவிய அளவில் தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியாக சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக மட்டுமே, மூன்றாவது அலையில் இந்தியா பெரிதும் இழப்பை சந்திக்கவில்லை எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது “