ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்வு!
Vaccination in India Reached 174 Crores Plus
கடந்த 24 மணி நேரத்தில் 44.68 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டததை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதை புரிந்து கொண்டு, அதன் செயல்பாடுகளை இந்தியா சிறப்பாக செயல்படுத்திக் காட்டி இருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் 173.5 கோடி தடுப்பூசி தேசத்தில் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் 44.68 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்து கொண்டு இருக்கின்றனர்.
“ கொரோனாவிற்கு எதிராக நிறைய தடுப்பூசிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருந்தாலும், கோவாக்சின், கோவீஷீல்டு இரண்டுமே தேசத்தில் பெருமளவில் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது “