தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்தது!
Vaccination India Reached 175 Crores 19 02 2022
இந்தியாவில் இன்று காலை அளவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
தற்போது 12 மணி நிலவரப்படி 10.97 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்து இருக்கிறது. வெகு விரைவில் பயனாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இந்தியா 100 சதவிகிதத்தை அடையும் என ஒன்றிய அரசு தெரிவித்து இருக்கிறது.
” மிகக்குறுகிய காலக்கட்டத்தில் தடுப்பூசி செயல்பாடுகளை செம்மையாக செயல்படுத்திய நாடாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு, இந்தியாவை பாராட்டி இருக்கிறது “