தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது!
Vaccination In India Reached 176.72 Crores
இன்று மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இன்று மட்டும் மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
“ உலக சுகாதார அமைச்சகம் தடுப்பூசி செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவை மேற்கோள்காட்டி பாராட்டியும் இருந்தது குறிப்பிடத்தக்கது “