தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 191.96 கோடியாக உயர்ந்து இருக்கிறது!
இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 191.96 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
இன்று இரண்டு மணி நிலவரப்படி 10.15 லட்சம் பேர் தேசம் முழுக்க தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருப்பதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 191.96 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. வெகுவிரைவில் இந்தியா 100 சதவிகிதம் என்ற இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ பெரும்பாலான அவசிய தேவைகளுக்கும் நாடல்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப் படுவதால் மட்டுமே மக்கள் பெருமளவில் வந்து தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருப்பதாக ஒரு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவசியம் தான் ஆனால் அதை திணிக்காதீர்கள் என்பது அவர்களின் வாதம் “