இந்தியாவில் 100 கோடியை நெருங்கி கொண்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை நெருங்கி கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 98 கோடியை எட்டி இருக்கிறது. இன்னமும் ஒரிரு நாட்களில் இந்த எண்ணிக்கை 100 கோடியை அடைந்து விடும் என உறுதி அளித்து இருக்கிறது மத்திய சுகாதார துறை அமைச்சகம். மேலும் தேசத்தில் 100 பேருக்கு தலா 73.5 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
“ 133 கோடிக்கும் மேல் மக்கள் தொகையை அதிகம் கொண்டு இருக்கும் தடுப்பூசியை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்ற நிலையில் இருந்த இந்தியா, தற்போது உலகளாவிய அளவில், அதிக தடுப்பூசிகளை தானே தனது நாடுகளில் தயாரித்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறது “