’Paytm Karo’ விற்கு என்ன தான் ஆச்சு?
RBI -யின் விதிமுறைகளை தொடர்ந்து மீறியதாக கூறி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளுக்கு அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பேடிஎம் நிறுவனம் கிட்டதட்ட இந்தியாவில் 30 கோடி பயனாளர்களை கொண்டு இருக்கிறது. பேடிஎம் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கூறி, கடந்த ஜனவரி 31 அன்று பேடிஎம் பேமேண்ட்ஸ் வங்கிக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை, ரிசர்வ் வங்கி விதித்தது.
ரிசர்வ் வங்கியின், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35ஏ-யின் கீழ் டெபாசிட், டாப் அப், கிரெடிட் சேவை சார்ந்த பணப்பரிவர்த்தனைகளை இனி பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் செய்ய முடியாது. ஆனாலும் UPI பேமெண்ட் மூலம் பணத்தை பெறவோ அனுப்பவோ முடியும். மற்ற வங்கியின் மூலம் பேடிஎம் சேவையை பயன்படுத்தும் பயனாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.
” இந்த நடவடிக்கைகள் குறித்து பேடிஎம் நிறுவனம் கூறிய போது, முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை, கட்டுப்பாடுகளே அதிகமாகி இருக்கிறது, வெகுவிரைவில் அனைத்தும் சரி ஆகும், பயனாளர்கள் கவலைப்பட தேவையில்லை என கூறி இருக்கிறது “