தேர்தல் பத்திரம் என்பது என்ன? அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் அதிக நிதி பெற்றன? அதை ஏன் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது?
தேர்தல் பத்திரம் என்பது என்ன, அதை ஏன் உச்ச நீதிமன்றம் தடை செய்தது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேர்தல் பத்திரம் என்பது என்ன?
தேர்தல் பத்திரம் என்பது கடந்த ஜனவரி 2018-யின் போது அரசால் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் வங்கிகள் மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிகளுக்கு நிதியாக கொடுக்கலாம். இதில் கொடுப்பவர்களின் பெயரோ, வாங்குபவரின் பெயரோ வெளிப்படைத் தன்மையற்றது.
ஏன் தேர்தல் பத்திரம் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது?
இத்திட்டத்தின் மூலம் கார்பரேட் நிறுவனங்களோ தனிநபரோ கட்சிகளுக்கு நிதி வழங்குவது சரி, ஆனால் அந்த நிதியின் மூலம் அவர்கள் அரசிடம் எதையும் எதிர்பார்க்கலாம். கார்பரேட்களுக்கு தேவையான சட்டங்களை அரசின் உதவியுடன் வகுத்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. பெருமளவிலான குற்றங்களும் இதன் மூலம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்தல் பத்திரத்தின் மூலம் எந்தெந்த கட்சிகள் அதிக நிதி பெற்றன?
கடந்த 5 ஆண்டுகளில், மத்தியில் மிகப்பெரிய கட்சிகளாக கருதப்படும், பாஜக தேர்தல் பத்திரத்தின் மூலம் 5,271 கோடியும், காங்கிரஸ் 952 கோடியும் பெற்று இருப்பதாக தகவல். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் பத்திரத்தின் மூலம், திமுக 431 கோடியும், அதிமுக 6 கோடியும் பெற்று இருக்கிறதாம்.
“ இவ்வளவு நிதிகள் எங்கு போகிறது யாருக்கு போகிறது எதற்காக இவையெல்லாம் செலவழிக்கப்படுகிறது என்பது தான் இங்கு அனைவருக்கும் புரியாத புதிராக இருக்கிறது “