கட்டுமான வேலையே முடியாத நிலையில் அவசரம் அவசரமாக அயோத்தி கோவிலை திறப்பது ஏன்?
கட்டுமான வேலைகள் ஒட்டு மொத்தமாக முடிய குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்ற நிலையில் அவசரம் அவசராம அயோத்தி கோவிலை திறப்பதற்கான காரணம் என்ன என பலரும் கேள்விகளை முன்மொழிந்து வருகின்றனர்.
குடமுழுக்கு என்பது கோவில் முழுதாக கட்டி முடிக்கப்பட்டு கோவிலுக்குள் கடவுளை கொண்டு சேர்க்கும் நிகழ்வு ஆகும். ஆனால் கட்டுமான வேலைகளே இன்னும் அரைகுறையாக இருக்கும் போது குடமுழுக்கை அவசரம் அவசரமாக நிகழ்த்த முடிவு செய்வது ஏன் என சங்கராச்சாரியார் உள்ளிட்ட பல மதகுருமார்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதை அரசியல் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, சங்கராச்சாரியார் உள்ளிட்ட ஒரு சில மதகுருமார்களே குடமுழுக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திறப்பு விழா என்பது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தலுக்காகவும் வேக வேகமாக நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
” மதகுருமார்களே திறப்பு விழா குறித்து பல கேள்விகளை எழுப்பி வருவதால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா பற்றி இணையத்தில் பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது “