ஹிந்தி, சமஸ்கிருதம் கற்க ஏன் எதிர்ப்பு காட்டுகிறீர்கள் – நிர்மலா சீதா ராமன்
ஹிந்தி, சமஸ்கிருதம் கற்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என நிர்மலா சீதா ராமன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பொதுவாகவே தென் இந்திய மாநிலங்களில், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எப்போதும் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஒரு மொழியை கற்றுக் கொள்ளுமாறு வேண்டுவது வேறு திணிப்புகள் வேறு, புரிந்து கொண்டு எதிர்ப்பு காட்டுங்கள் என தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தாய் மொழிகள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது அதிகப்படியான மக்கள் பேசுகிறார்கள் என்ற காரணத்திற்காக அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை திணிக்க முடியாது. தனிப்பட்ட ஒருவர் கற்றுக் கொள்ள விருப்பப்பட்டால் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும் என தென் இந்திய தலைமைகள் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றனர்.
“ ஒரு மொழியை விருப்பம் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள் என்பது சுதந்திரம், விருப்பம் இல்லாவிட்டால் என்ன விரும்பி கற்றுக்கொள்ளுங்கள் என்பது திணிப்பே என இணையவாசிகளும் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் “