Contest என்னும் பெயரில் மக்களிடம் பணம் பறிக்கும் Instagram திருடர்கள்!
ஒரு காலத்தில் வீடு ஏறி குதித்து திருடியவர்கள் இன்று அவர்களின் வீட்டிற்குள்ளேயே சொகுசாக இருக்கையில் உட்கார்ந்து இணையத்தில் இருந்து கொண்டு திருடுகின்றனர்.
சமீப காலமாக கவிதை போட்டி, ஓவிய போட்டி, கதை எழுதும் போட்டி, மீம் கிரியேசன் போட்டி என்று இன்ஸ்டாகிராமில் Suggested போஸ்ட்கள் தொடர்ந்து வலம் வருகின்றன. Suggested போஸ்ட் என்பது நீங்கள் அந்த பேஜை தொடரவில்லையெனினும் அது உங்கள் பக்கத்தில் ஒரு விளம்பரம் போல வந்து நிற்கும். அதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் ஒரு போட்டி அறிவிப்பு இருக்கும் அத்தோடு நம்மை கவரும் வகையில் ஒரு இலட்சம்,ஐம்பதாயிரம் என்று பரிசுத்தொகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கும். மாறாக Registration Fees என்ற பெயரில் 500 முதல் 1000 ரூபாய் வரை அறிவிக்கப்பட்டிருக்கும்.
கவர்ச்சிகரமான அந்த விளம்பரத்தை நம்பி பெரும்பாலானோர் ரிஜிஸ்டரும் செய்து பணமும் ஆன்லைனில் கட்டி தங்களுடைய ஆதார் எண், போட்டோ, மற்றும் சில முக்கியமான தகவல்களை உள்ளிடுகின்றனர். ஒரிரு வாரங்களில் ஆன்லைனிலேயே நடந்து முடிகின்றது அந்த போட்டி. பின்னர் கலந்து கொண்டவர்கள் முடிவுக்காக காத்திருக்கும் போது, போட்டி நடத்துபவர்கள் ஒரிரு பேரை வின்னர்கள் என்று அவர்களது சொந்த இணையதளத்தில் போட்டோ மற்றும் பெயருடன் அறிவிக்கின்றனர். அதைக் கூர்ந்து விசாரித்த போது தான் ஒரு சில உண்மைகள் வெளிப்பட்டன. அதாவது அவர்கள் வின்னர்கள் என்று அறிவித்த யாரும் அந்த போட்டியிலேயே பங்கேற்காதவர்களாக இருக்கிறார்கள். அதாவது பொய்யாக ஒரு போட்டோவும் பெயரையும் போட்டு விட்டு அவர்களை வின்னர்களாக அறிவித்து விட்டு பங்கேற்ற அனைவரையும் ஏமாற்றி விடுகிறார்கள்.
பணம் மட்டும் போனதாய் இல்லாமல் இதில் கலந்து கொண்டவர்களின் சொந்த தகவல்களும் இங்கு திருடப்படுகின்றன.
வீட்டிலேயே இருந்து கொண்டு கவர்ச்சிகரமாக வெப்சைட்டுகள் கிரியேட் செய்து அதில் Contest நடத்துவதாக அறிவித்து அதை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என்று மக்கள் அதிகமாய் பயன்படுத்தும் சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்தி திருடப்போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து திருடுகின்ற இந்த திருடர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்.
” கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் Contestகளையும் பரிசுகளையும் நம்பி காசை இழந்து நிற்காதீர்கள் “
பின்குறிப்பு : சமீப காலமாக இத்தகைய இன்ஸ்டாகிராம் திருடர்கள் அதிகம் உலவி வரும் இணைய தளம்
https://bloomingkalakar.com/blooming-kalakar-poetry-and-creative-writing-competition/