வெறும் 6 ரூபாயில் 120 கி.மீ பயணம் – கலக்கும் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ நிறுவனம் ஆப்டிமா HX என்னும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டு பேட்டரிகள் கொண்ட இந்த பைக்கிற்கு தினம் நீங்கள் 6 ரூபாய்க்கு சார்ஜ் செய்தால் போதும் 120 கிமீ வரை பயணிக்கலாம். பெட்ரோல் விலை எகிறியதற்கு பின் பலரும் ஒரு மாற்று பயணத்தை தேடிக்கொண்டிருக்கையில் ஹீரோ நிறுவனம் அதை தந்திருக்கிறது.

இரு நூறு ரூபாய்க்கு பெட்ரோல் இட்டாலே இன்றைய சூழ்நிலையில் 60 கிமீ தூரம் தான் செல்ல முடியும் என்ற நிலையில் வெறும் 6 ரூபாய்க்கு பேட்டரியை சார்ஜ் செய்தால் போதும் 120 கிமீ செல்லலாம் என்றால் ஒரு மிகச்சிறந்த மாற்றாக தானே இதைக்கருத முடியும். ஆயில் தேவை இல்லை, செயின் பிராக்கெட் செலவு இல்லை, அதிகபட்ச மெயின்டனன்ஸ் தேவை இல்லை. முறையாக சார்ஜ் செய்தால் மட்டும் போதும் என்றால் அது தனி ஒருவருக்கு மிகப்பெரிய லாபகரமானது தானே!

இது மட்டுமா டிஜிட்டல் டிஸ்ப்ளே, ரிமோட் கன்ட்ரோல்டு சாவிகள், செக்யூரிட்டி அலார்மிங் சிஸ்டம் என்று ஒரு வாகனத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்த பைக்காகவே இருக்கிறது. வாங்கும் சமயத்திலிருந்து பேட்டரிக்கு 3 வருட வாரண்ட்டியும் கூடவே அளிக்கிறது ஹீரோ நிறுவனம். இன்றைய பெட்ரோல் விலைக்கு வண்டி எடுத்த செலவை ஒரு வருடத்திலேயே எடுத்து விடலாம் என்ற நிலையில் மூன்று வருடம் பேட்டரிக்கு வாரண்டி என்னும் போது ஒரு நல்லவித ஸ்கூட்டரை ஹீரோ அறிமுகம் செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

“ சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லை, பெட்ரோல் தேவை இல்லை, 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும் 120 கி.மீ வரை செல்லலாம் என்னும் போது ஒரு லாபகரமான நோக்கு இருப்பதாகவே அறியப்படுகிறது. இன்று பலரும் தான் வாழுகின்ற நகரப்பகுதிகளுக்குள் செல்லவே ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதால் இந்த பைக்குகள் அவர்களின் பெட்ரோல் செலவீனத்தை மிச்சப்படுத்தும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை “

About Author