ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
Jyothika Udanpirappe Trailer Released In Net
சசிகுமார் – ஜோதிகா நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படம், அக்டோபர் 14 அன்று அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
” ஜோதிகா அவர்களின் 50 ஆவது படம், மற்றும் சசிக்குமார், சமுத்திரக்கனி என்ற கூட்டணியோடு கதைக்களமும் கிராமப்புற பாணியில் வித்தியாசமாக இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது “