கேரளத்திலிருந்து வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம் – தமிழக அரசு
தொடர்ந்து கேரளத்தில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு RT-PCR சோதனையை கட்டாயப்படுத்தி உள்ளது தமிழக அரசு.
சில நாட்களாகவே கேரளத்தில் அதிகரித்து வரும் கொரோனோ தொற்று காரணமாக தமிழக-கேரள மாநில எல்லைகளில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் RT-PCR பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது ரயில் வழியாக விமானம் வழியாக மாநிலத்திற்குள் உள்நுழைபவர்களுக்கும் பொருந்தும் என்றும் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இந்த பரிசோதனை அவசியமில்லை என்பதையும் மாநில அரசு அறிவித்துள்ளது.
“ நாம் எவ்வளவோ முன்களத்தில் இருந்தாலும் இந்த கொரோனோ பின்களம் காண்பதாய் இல்லை. முடிந்த வரை முகக்கவசம் அணிவோம் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்போம் தடுப்பூசி செலுத்திக்கொள்வோம் இது மட்டுமே இந்த கொரோனோவை எதிர்க்க நம்மிடம் இருக்கும் அரண் “