ட்ரென்டிங்கில் இருக்கும் ’வலிமை’யான ஹேஸ்டாக்!
Kollywood Pride Valimai GLIMPSE
’வலிமை Glimpse’ வெளியானதில் இருந்தே தினமும் ஒரு ’வலிமை’ ஹேஸ்டாக் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று ட்ரென்டிங் இருக்கும் ஹேஸ்டாக் ‘KWPrideValimaiGLIMPSE’. கிட்ட தட்ட 9 மில்லியன் பார்வையாளர்கள், 854K லைக்ஸ் என்று கோலிவுட்டை கலக்கி வருகிறது ‘வலிமை Glimpse’.
பொங்கலுக்கு ’வலிமை’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்ததில் இருந்தே அஜித் ரசிகர்கள் தினமும் ஏதோ தவம் புரிவது போல நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பக்கம் தளபதியின் ‘பீஸ்ட்’ படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
“ அப்படி வெளியாகும் பட்சத்தில் இந்த பொங்கல் தல மற்றும் தளபதி மோதிக்கொள்ளும் அனல் களமாக இருக்கும் “