தீபாவளிக்கு வெளியாகிறது சிலம்பரசனின் ‘மாநாடு’!

Maanaadu To Hit Screens This Deepavali

Maanaadu To Hit Screens This Deepavali

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ்’ புரொடக்சன் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன், எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதி ராஜா, கருணாகரன், மனோஜ், ப்ரேம் ஜி , ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் ’மாநாடு’ திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு (நவம்பர் 4) அன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தலைவர் ரஜினி காந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் படக்குழுவினால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் அறிவித்திருந்த நிலையில், அஜீத் அவர்களின் வலிமையும் தீபாவளி கிளாஷ்சில் களம் இறங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக சிலம்பரசனின் ‘மாநாடு’ தீபாவளிக்கு களம் இறங்கும் என்று படக்குழுவினர் அறிவித்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

“ இந்த தீபாவளி தலைவர்- தல – சிலம்பரசன் மூவரும் போட்டி போடுகின்ற ஒரு மும்முனை போட்டி களமாக இருக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author