தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: முந்தைய அரசை எச்சரித்து அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக பொதுமக்களின் மீது நடந்த துப்பாக்கி சூடு ’ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய வடு’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசை கடுமையாக சாடியுள்ளது.
ஸ்டெர்லைட் எனப்படும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் போராடிய பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ‘ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய வடு’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அரசை எச்சரித்துள்ளது.
மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசு இன்னமும் பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் என்றும், மனித உரிமை ஆணையம் சமர்ப்பித்துள்ள துப்பாக்கி சூடு குறித்த விசாரணை அறிக்கை குறித்து, மத்திய மாநில அரசுகள் ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமனறம்.
“ பணமுதலாளிகளுக்கு கைகட்டி சேவை செய்யும் அரசு இருக்கும் வரை, அந்த 13 பேருக்கும் என்றும் நீதி கிடைக்கப்போவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துக்களை கொதிப்புடன் பதிவிட்டு வருகின்றனர் “