மகாநதி சீரியலில் இன்று ராகினிக்கு திருமணத்தை முடித்த திமிரில் பசுபதி அதிகமாக பேசுகிறார். அவரோடு சேர்ந்து அன்பும் காவிரியை கிண்டல் செய்து பேசுகிறார். விஜய் குறுக்கிட்டு உங்கள் ஆசை படி உங்களது மகன் மற்றும் மகளது திருமணம் நடந்து விட்டதா அப்பொழுது அதை கொண்டாடுங்கள் அதை விட்டுவிட்டு எங்களிடம் வம்பு இழுக்காதீர்கள் செல்லுங்கள் என துரத்தி விடுகிறார். பின்னர் காவிரியிடம் உனக்கும் உனது குடும்பத்திற்கும் அந்த இரண்டு கிரிமினல்களிடமிருந்து எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறுகிறார்.
நிவின் யமுனாவை தேடி கண்டுபிடித்து தனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதாக கூறுகிறார். யமுனாவோ அஜயும் ராகினியும் காதலித்தால் அது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம் அதில் நாம் ஏன் தலையிட வேண்டும் என சப்பை கட்டு கட்டுகிறார். நிவின் இனி எனது முகத்திலேயே விழிக்காதே என யமுனாவிடம் கூறிவிட்டு செல்கிறார். யமுனா கடுப்போடு வீடு திரும்ப இரவில் கங்கா மற்றும் குமரன் வருகிறார்கள். குமரனிடம் யமுனா நாம் அந்த திருமணத்தை தடுத்தால் அன்பு தேவை இல்லாமல் நமது நம் மீது பழி போடுவார் அதனால் தான் நான் அதைக் கூறவில்லை எனக் கூறுகிறார். இதை முழுவதாக குமரன் நம்பவில்லை.
அடுத்த நாள் குமரனும் கங்காவும் கொடைக்கானலுக்கு செல்கிறார்கள். அங்கு கங்கா முதலில் எங்கள் வீட்டிற்கு சென்று விட்டு ஓய்வெடுத்து விட்டு உங்கள் வீட்டுக்கு செல்லலாம் எனக் கூறுகிறார். வீடு சேர்ந்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. விஜய்யும் காவேரியும் அங்கு இருப்பதை பார்த்து எரிச்சல் ஆகிறார் கங்கா. பாசமாக ஓடி வந்த காவேரியை தள்ளிவிட்டு நீ ஒரு சுயநலக்காரி என கத்துகிறார். உனது முகத்திலேயே விழிப்பதே பாவம் எனக் கூறுகிறார். விஜய் நாம் வேண்டுமானால் ஹோட்டலுக்கு சென்று விடலாம் என கூறினாலும் குமரன் அதை வேண்டாம் என தடுத்து விடுகிறார். நான் இதை சரி செய்து மீண்டும் கங்காவை அழைத்து வருகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு கூறி குமரன் செல்கிறார்.