மணிப்பூர் கொடூரம் – ‘எங்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான்’
Manippur Issue Police Are The Main Culprit Says People Idamporul
மணிப்பூர் விவகாரத்தில் போலீஸ்சே அந்த கும்பலிடம் அந்த பெண்களையும், அவர்களின் குடும்பத்தையும் ஒப்படைத்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் உடையின்றி ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான நிலையில், அந்த இரண்டு பெண்களையும் அவர்களின் குடும்பத்தையும் அந்த கும்பலிடம் ஒப்படைத்ததே போலீஸ் தான் என்ற அதிர்ச்சிகர தகவல் ஒன்றை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.
” வீடியோவில் தோன்றும் ஒரு பெண்ணின் தந்தையையும், சகோதரர் ஒருவரையும் சேர்த்து அந்த கும்பல் கொலை செய்து இருக்கிறதாம். இந்த வீடியோ எடுக்கப்பட்டது எங்களுக்கே தெரியாது, இது மட்டும் வெளிவரவில்லையெனில் இந்த ஒட்டு மொத்த சம்பவமும் மூடிமறைக்கப்பட்டு இருக்கும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறி இருக்கின்றனர் “