ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வர தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு!
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன.
நிதி இழப்பை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் திட்டத்தை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை காட்டி வருவதால் அந்நோக்கம் தற்போதைக்கு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வரும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் மாநில அரசுகளுக்கு பெரும் வரி இழப்பும் நிதி இழப்பும் ஏற்படும். இதை கருத்தில் கொண்டே மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் இதனை எதிர்த்திருக்கின்றனர். மேலும் இங்கு பெரும்பாலான மாநில அரசுகள் இயங்குவதே பெட்ரோல் டீசலின் கீழ் வரும் வரியினாலும் டாஸ்மாக்கினாலும் மட்டும் தான் என்பதும் மாநில அரசுகள் இதை எதிர்ப்பதற்கு கூடுதல் காரணம்.
“வருவாய் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலை எதிர்த்திருக்கும் மாநில அரசுகள், மக்களின் அத்தியாவசிய அவஸ்தையை இங்கு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் இங்கு வேதனைக்குரியது”