ஹேஸ்டாக் போரில் மாஸ்டரை வலிமையாக முந்திய ’வலிமை’
கடந்த ஜூன் மாதம் வரை ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் வலிமை முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு காலத்தில் தெருக்களத்தில் நின்று தன் ஹீரோவின் பேனர், போஸ்டர்களை ஒட்டுவதற்கு இடத்தை பிடிப்பதற்காக இரு வேறு ஹீரோக்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். அது கைக்கலப்பில் கூட கொண்டு போய் முடியும். ஆனால் இன்றெல்லாம் அந்த ரசிக சண்டைகள் டிஜிட்டல் சண்டைகளாக மாறி உள்ளன. லைக்குகள்,சேர்கள்,ட்ரென்டிங்குகள்,வசூல்கள் என்று இதை வைத்து தான் இன்று ரசிகர்கள் சண்டைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அரங்கேறி வருகின்றன. யூடியூப்பில் ஒரு ஹீரோவின் படத்தின் பாடலோ, முன்னோட்டமோ வெளியானால் அந்த ஹீரோவின் ரசிகர்கள் அதற்கு வியூ கவுன்ட், லைக் கவுன்ட் என அதை எல்லாம் ரிப்போர்ட் எடுத்து வைத்து கொண்டு அதை இன்னொரு ஹீரோவின் கவுன்ட்களுடன் கம்பேர் செய்து அந்த ஹீரோவின் ரசிகர்களுடன் சண்டையிடுவது தான் தற்போதைய ட்ரெண்ட்.
இது போல ட்விட்டர் என்னும் களத்தில் நடைபெறும் ரசிக போருக்கு பெயர் தான் ஹேஸ்டாக் போர். தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஹேஸ்டாக் போர் என்பது எப்போதும் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையில் மட்டுமே பெரும்பாலும் அரங்கேறும். கடந்த ஜூன் வரையிலான இந்த ஹேஸ்டாக் போர் கணக்கெடுப்புகளில் இந்திய அளவில் வலிமை முதலிடத்தையும் மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பெற்றிருப்பதாக ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.
“ அடுத்து என்ன, இன்னும் ரெண்டு நாட்களுக்கு சமூக வலைதளங்களில் வலிமைக்கும் மாஸ்டருக்கும் அடிபிடி சண்டை தான் “