டெங்குவின் மூலம் குறைகின்ற இரத்ததட்டுக்களை எப்படி விரைவில் அதிகரிக்கலாம்?
டெங்குவின் மூலம் குறைகின்ற இரத்த தட்டுக்களை எப்படி வெகு விரைவில் அதிகரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
டெங்குவின் மூலம் குறைகின்ற இரத்த தட்டுக்களை அதிகரிப்பதற்கு நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்கள் அவசியமாகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இளநீர், நாட்டு மாதுளை ஜூஸ், கரும்புச்சாறு உள்ளிட்டவைகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளும் போது 3 நாட்களுக்குள் இரத்ததட்டு அதிகரிக்கிறது.
“ எந்த அளவிற்கு நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு வெகுவிரைவில் டெங்கு விலகும், காய்ச்சல், குமட்டல், தலை வலி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து என்ன காய்ச்சல் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகிறது “