ஆல்பா மேல் என்பதன் பிம்பம் இளைஞர்களிடையே தவறாக சித்தரிக்கப்படுகிறதா?
What Is Alpha Male There Is Some Misunderstanding In That Meaning Fact Here Idamporul
ஆல்பா மேல் என்பதின் அர்த்தம் தற்போதைய சினிமாக்கள் மூலம் இளைஞர்களிடையே தவறாக கொண்டு சேர்க்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆல்ஃபா மேல் என்பதின் ஆழ்ந்த அர்த்தம் அதீத அறிவு மிகுந்தவர், சிறந்த நிர்வாகத் திறன் உடையவர், தலைமைப்பண்பு மிகுந்தவர், அடிபணியாதவர் என்பதாகும். ஆனால் தற்போதைய திரைப்படங்களில் குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுபவர், பெண்களை தரக்குறைவாக நடத்துபவர், ஆணாதிக்கம் மிகுந்தவர் என காட்டப்படுவதால் ஆல்பா மேல் என்பதின் அர்த்தத்தை இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
“ இன்றைய சினிமாக்களின் அசைவுகளை இளைஞர்கள் கூர்மையாக உற்று நோக்குவதால், அது சமூகத்திலும் பிரதிபலிக்கிறது என்பது ஆகச்சிறந்த உண்மை, ஆதலால் இயக்குநர்கள் கண்டதையும் கிண்டி வைக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது “