வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவிக்கும் மணிமேகலை? காரணம் என்ன?
பிரபல தொகுப்பாளனி மற்றும் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை தனது வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை பண கஸ்டத்தால் வீட்டு லோன் கூட கட்ட முடியாமல் தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அவரும் அவரது கணவர் ஹூசைனும் தங்களது யூடியூப் பக்கத்தில் இருந்து வரும் வருமானத்தை வைத்து ஏதோ வாழ்க்கையை ஓட்டி வருகிறார்களாம்.
பெரும்பாலும் இந்த மிடில் கிளாஸ் மற்றும் அதற்கு கீழ் இருப்பவர்கள் அத்தியாவசியம் என்பதை நன்றாக தெரிந்து வைத்து இருப்பார்கள். ஆனால் இந்த மிடில் கிளாஸ்சுக்கு கொஞ்சம் சற்றே மேலே இருப்பவர்கள், அநாவசிய செலவுகளையே அத்தியாவசமாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள். பெரும்பாலும் இந்த கேட்டகரியில் இருப்பவர்கள் அந்த அநாவசிய அத்தியாவசத்தை தீர்க்க லோன்கள், கடன்கள் என விழுந்து விட்டு வாழ்க்கை முழுக்க அதை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் வீட்டு தேவைகளையும், வீட்டிற்கு தேவையே இல்லாததையும் என எல்லாவற்றையும் தவணை முறைகளில் வாங்கி குவித்து விட்டு, சம்பாதிக்கும் மொத்ததையும் EMI ஆக கட்டி வருகின்றனர். மணிமேகலையும் ஹூசைனும் அந்த கேட்டகரியில் தான் வருவதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
“ எதுவாகினும், எந்த கடினமான சூழல் ஆகினும், அவர்கள் அதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை, மீள்வார்கள் பார்க்கலாம் “